வாட்ஸ் அப் பயன்பாடு : இந்தியாதான் பர்ஸ்ட்!


சர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப்பை இந்தியர்களே அதிகளவில் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மொபைல் முக்கியமான அங்கமாகிவிட்டது. சாப்பாடு இல்லாமல் கூட இருந்து விடுவார்கள் போலிருக்கிறது, மொபைல் இல்லாமல் முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. 

மொபைலில் வாட்ஸ் அப் செயல்பாடு பற்றி காம்ஸ்கேர் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை உலகம் முழுவதும் நடத்தியுள்ளது. இதில் இந்தியாவில்தான் அதிகமானோர் மொபைல் வாட்ஸ் அப் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதில் அதிகளவு நேரத்தை செலவழிக்கும் தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் இந்தியர்கள் 98 சதவிகிதம் மொபைல் வாட்ஸ் அப் செயலி மூலமும், 2 சதவிகிதம் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் தகவல் பரி‌மாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்க‌ப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்டத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

இந்தியர்கள், சுமார் 89 சதவிகிதம் மொபைல் வாட்ஸ் அப்பிலும், 11‌ சதவிகிதம் கணினியிலும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தியிருக்கின்றனர். இரண்டாவது இடத்தில் 87 சதவிகிதம் இந்தோனேஷியாவும், 80 சதவிகிதம் மெக்சிகோவிலும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் அர்ஜென்டினா, மலேசியா மற்றும் ஸ்பெயின் நாடுகளிலும் வாட்ஸ் அந்தப் பயன்பாடு அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

POST COMMENTS VIEW COMMENTS