மொபைல் ரீஜார்ஜ் பண்ணணுமா? ஃபேஸ்புக் போங்க!


ஃபேஸ்புக் நிறுவனம் தங்கள் பயனாளர்களுக்கு மொபைல் ரீஜார்ஜ் ஆஃப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட சமூக வலைத்தளம் ஃபேஸ்புக். பெரும்பாலான நெட்டிசன்களின் மொபைல் டேட்டாவை, ஃபேஸ்புக்கே குடித்துவிடும். அந்த அளவிற்கு ஃபேஸ்புக், பயனீட்டாளர்களை கட்டிப்போட்டுள்ளது. இந்த பயனீட்டாளர்களை தங்கள் வசத்திலேயே வைத்துக்கொள்ள நாள்தோறும், பல புதிய அப்டேட்களை ஃபேஸ்புக் வழங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது ஃபேஸ்புக் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஆஃப்ஷன் தான் மொபைல் ரீஜார்ஜ் . தங்கள் பயனீட்டாளர்கள் ரீஜார்ஜ் செய்வதற்கு மற்ற ஆப்ஸை பயன்படுத்த வேண்டிய தேவையை அறிந்து, ஈஸியாக ரீஜார்ஜ் செய்துகொள்ள இந்த புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு போனில் வலது பக்கம் மேலே உள்ள ஆஃப்ஷன்ஸை கிளிக் செய்தால், அதில் வரும் பட்டியலில் மொபைல் ரீஜார்ஜூம் தென்படும். அதைப்பயன்படுத்தி நீங்கள் உங்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் ரீஜார்ஜ் செய்துகொள்ளலாம். இது பாதுகாப்பானது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS