ரூ.6,999 விலை! பேனாசோனிக்கின் புதிய ஸ்மார்ட்போன்..


பேனாசோனிக் நிறுவனம் பி101 என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

இந்திய சந்தைகளில் ஸ்மார்ட்போன் விற்பனைகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் இடத்தை பிடிக்கும் முனைப்பில் அனைத்து நிறுவனங்களும், புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. இதில் பட்ஜெட் விலையில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் தான் வாடிக்கையாளர்களை அதிகம் கவருகின்றன என்பதை அறிந்துள்ள நிறுவனங்கள், குறைந்த விலை போன்களை அதிகம் வெளியிடுகின்றன.

இந்நிலையில் பேனாசோனிக் நிறுவனம், பி101 என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.6,999 ஆகும். இதை வாங்கும் ஐடியா சிம் கார்டு வாடிக்கையாளர்களுக்கு 60 ஜிபி டேட்டா இலவசாமக் வழங்கப்படுகிறது. இரட்டை சிம் கார்டுகள் பொறுத்தும் வகையில், 5.45 இன்ச் டிஸ்ப்ளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் வந்துள்ளது. குவாட்-கோர் மீடியாடெக் பிராஸசருடன், 2 ஜிபி ரேம் இதில் உள்ளது. 16 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜுடன், கூடுதலாக 128 ஜிபி மைக்ரோ கார்டை இதில் பொறுத்த முடியும். 8 எம்பி பின்புற கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS