கேம் பிரியரா! இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கே.. ஆப்ஷன்ஸ்ல மிரண்டுபோவீங்க!


8 ஜிபி ரேம், 20 எம்பி இரட்டைக்கேமரா, 13 எம்பி செல்ஃபி கேமரா என மிரண்டுபோக வைக்கும் வசதிகளுடன் ஜியோமி ப்ளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுதவிர வீடியோக்கள் பார்ப்பது, கேமராவில் போட்டோக்கள் எடுப்பதை பலர் அதிகம பயன்படுத்துகின்றனர். இந்த காரணங்களை எல்லாம் தவிர்த்து, ஸ்மார்ட்போன்களை கேம் விளையாடுவதற்காக அதிகம் பயன்படுத்தும் ஒரு கூட்டம் அனைத்து நாடுகளிலும் உண்டு. அந்தக் கூட்டம் தான் க்ளாஸ் ஆஃப் க்லன்ஸ், டெம்ப்ள் ரன், சப்வே சர்ஃபெர்ஸ் போன்ற கேம்களை உலக அளவில் கொண்டு சேர்த்தன.

இந்த கேம் பிரியர்கள் தங்கள் போன்களை கேம் விளையாடுவதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு வாங்குகின்றனர். அவர்கள் பார்க்கும் அடிப்படை வசதிகளில் கேம் விளையாடுவதற்கு ஏதுவாக எந்த ஸ்மார்ட்போன் உள்ளது என்பது முதல் அலசலாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு சில மொபைல் நிறுவனங்கள் செல்போன்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் கேம் பிரியர்கள் கொண்டாடுவதற்காக ஜியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கேம் விளையாடுவதற்காக வசதியாக ஜாய்ஸ்டிம் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. அதைக்கொண்டு அனைத்து கேம்களையும் ஸ்வாரஸ்யமாக விளையாட முடியும். தற்போது இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்தியா உட்பட, அனைத்து நாடுகளிலும் வெளியிடப்படும்.

சிறப்பம்சங்கள் :

ரேம் : 8 ஜிபி அல்லது 6 ஜிபி என இரண்டு ரகங்கள் உள்ளது.

இண்டெர்நல் ஸ்டோரேஜ் : 128 ஜிபி அல்லது 64 ஜிபி 

டிஸ்ப்ளே : 6 இன்ச் ஃபுல் ஹெச்டி

கேமரா : பின்புறம் - 20 எம்பி இரட்டைக்கேமரா , செல்ஃபி - 12 எம்பி

பேட்டரி : 4000 எம்ஏஎச்

சிம் கார்டு : 4ஜி வோல்ட்

இதில் 6 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.31,100. 8 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.36,300 ஆகும். 

POST COMMENTS VIEW COMMENTS