ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது


கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைகோள்  நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை அதிகாலை 4 மணியளவில் கடல்சார் ஆராய்ச்சிக்காக  ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைக்கோள் விண்ணில் பாய்கிறது. இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன், கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐஆர்என்எஸ்எஸ் வழிக்காட்டி செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. அதில் முதற்கட்டமாக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. இது போன்ற செயற்கைக்கோள் வரிசையில் ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ என்ற செயற்கைக்கோளை, பி.எஸ்.எல்.வி.சி-41 ராக்கெட் மூலம் அனுப்பி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, மீனவர்களுக்கு சிக்னல் ரிசீவர் ப்ளூடூத் மூலமாக செல்போனுடன் இணைக்கப்பட்டு  மீன்பிடி மண்டலங்கள், வானிலை எச்சரிக்கை, தாங்கள் இருக்கும் கடல்பகுதி ஆகியவற்றை இச்செயற்கைக்கோள் மூலமாக அறிந்துகொள்ளும் வகையில் இது உதவும் என்றார்.
 

POST COMMENTS VIEW COMMENTS