விண்வெளியில் ஒரு சொகுசு ஹோட்டல்: 12 நாட்கள் தங்க ரூ. 61 கோடி!


விண்வெளியில் சொகுசு ஹோட்டல் ஒன்றை அமெரிக்க நிறுவனம் திறக்கிறது. இதில் ஆறு பேர் 12 நாட்கள் தங்க 61 கோடி ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்ஜோஸில் ’ஸ்பேஸ் 2.0’ மாநாடு நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட அமெரிக்காவின் ஓரியோன் ஸ்பேன் என்ற நிறுவனம் இந்த தகவலை அறிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு விண்வெளி ஹோட்டலை திறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான பயிற்சிகளை மூன்று மாதங்களுக்கு வழங்குகிறது. 

மக்களுக்கு விளம்பரங்கள் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விண்வெளி ஹோட்டலில் தங்க முன்பதிவுத் தொகையாக 51 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது. வித்தியாசமான அனுபவத்தை தரும் இந்த ஹோட்டலில் ஆறு பேர், 12 நாட்களுக்குத் தங்க இந்திய மதிப்பில் சுமார் 61 கோடி ரூபாய் வசூலிக்கப்படவுள்ளது.


 

POST COMMENTS VIEW COMMENTS