315 ஐடி-க்களை முடக்குமாறு ட்விட்டருக்கு மத்திய அரசு கோரிக்கை


ட்விட்டரில் இருந்து 315 இந்திய ட்விட் கணக்குகளை முடக்குமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் இடையே தொடங்கப்பட்ட 315 ட்விட்டர் கணக்குகளின் தகவல்களை கேட்டு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஏற்கனவே இந்தியாவின் 102 ட்விட்டர் கணக்குகளை நீக்குமாறு கூறியிருந்த நிலையில், தற்போது 144 கணக்குகளை நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டர் தரப்பிலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் அதிகமாக ட்விட்டர் கணக்குகளை முடக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நாடுகளின் பட்டியலில் 28% கணக்குகளை முடக்கோரி அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதாக கூறியுள்ளது. 

அதற்கு அடுத்த இடத்தில் 17% கணக்குகளை முடக்ககோரி ஜப்பான் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இந்திய தரப்பிலிருந்து 3% கணக்குகளை முடக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை பரப்புவது, பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுவது, முறைகேடுகளை மேற்கொள்வது உள்ளிட்ட காரணங்களால் இந்த கணக்குகள் முடக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ட்விட்டர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய தரப்பில் இருந்து முடக்கக்கோரிய ட்விட்டர் கணக்குகளில் ஏற்கனவே 15% கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS