6 ஜிபி ரேம், இரட்டைக் கேமரா: அஸஸ் ஸென்ஃபோன் 5!


அஸஸ் ஸென்ஃபோன் 5  வரும் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. 

அஸஸ் நிறுவனம் ஸென்ஃபோன் 5 என்ற புதிய ரக மாடலை சீனாவில் வரும் 12ஆம் வெளியிடுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் எச்டி டிஸ்ப்ளே கொண்டது. அத்துடன் 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் ஆகிய ரகங்களில் இது வெளியாகிறது. இதன் இண்டர்நல் ஸ்டோரேஜ் 64 ஜிபி ஆகும். அத்துடன் இதில் கூடுதலாக மைக்ரோ கார்ட் பொருத்தும் வசதியும் உள்ளது. 

கைரேகை சென்சார் கொண்டுள்ள இந்த போனில், ஃபேஸ் அன்லாக் வசதியையும் பெற்றுள்ளது. இதில் 12 எம்பி பின்புற இரட்டைக்கேமராவும், 8 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. ஆண்ட்ராய்டு 8.0 ஒரியோ இயங்குதளத்தில் செயல்படும். இதில் 3300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS