ஜியோ ஜாக்பாட்! மேலும் ஒரு வருடம் இலவச சேவை..


கடந்த ஜியோ பிரைமில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு மேலும் வருடம் இலவச சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் வாடிக்கையாளராக ரூ.99 கட்டி இணைந்தனர். பிரைம் வாடிக்கையாளர்களுக்கு சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மூன்று மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டது. இதில் இலவச வாய்ஸ் கால், எஸ்டிடி, எந்தத் தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் ரோமிங் வசதி, நாடுமுழுவதும் இலவச ரோமிங், நாள்ஒன்றுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா, எஸ்எம்எஸ் ஆகியவை அளிக்கப்பட்டன. இந்த பிரைம் உறுப்பினர் சேவை வரும் மார்ச் 31-ம் தேதியோடு முடிய உள்ளது. 

இந்நிலையில் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜியோ பிரைமில் ரூ.99 செலுத்தி வாடிக்கையாளர்களாக உள்ளவர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு சேவை நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் வரும் 31-ம்தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் இது பொருந்தும். ஏற்கனவே ரூ.99 செலுத்திய உறுப்பினர்கள் மீண்டும் ரூ.99 செலுத்தத் தேவையில்லை. ஆனால் ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் ஜியோ பிரைமில் இணையும் வாடிக்கையாளர்கள் மட்டும் ரூ.99 உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும். 

POST COMMENTS VIEW COMMENTS