"அப்பாச்சி" ஆர்டிஆர் 160 4வி : இன்று முதல் மார்க்கெட்டில்!


பிரபல மோட்டார் நிறுவனமான டிவிஎஸ், 2018 ஆம் ஆண்டின் புதிய அப்பாச்சி மாடலை வெளியிட்டுள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர் 160-4வி என்ற இந்தப் புதிய மாடல் பைக், 4 வால்வு சிஸ்டம் கொண்ட 160 சி.சி ஆயில் கூல்டு இன்ஜின் திறன் கொண்டது. புதிய சஸ்பென்ஷன் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டிருப்பது. இதன் தனிச்சிறப்பு. எல்இடி ஹெட்லைட்டுகள், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின் புறத்தில் ஷோவா மோனோஷாக் அப்சார்பர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. 

இதன் முன்சக்கரத்தில் 270 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் ட்ரம் இணைக்கபட்டுள்ளது. அப்பாச்சி 200 4-வி பைக் போன்று இதிலும் டபுள் பேரல் சைலென்சர் உள்ளது. இதன் விலை ரூ.87,178 ஆகும். 

சிறப்பம்சங்கள்:

இன்ஜின் - 159.77 சிசி

பெட்ரோல் டேங்க் அளவு - 12 லிட்டர்

குறைந்தபட்ச பெட்ரோல் இருப்பு - 2.5 லிட்டர்

மைலேஜ் - 30 கி.மீ என கூறப்பட்டுள்ளது.

தொடர் பயணம் - 360 கி.மீ

கியர்ஸ் - 6

எடை - 143 கிலோ

முன்புறம் - டிஸ்க் ப்ரேக்

பின்புரம் - ட்ரம் ப்ரேக்

வீல் - அலாய் வீல்ஸ்

ஸ்பீடாமீட்டர் - டிஜிட்டல்

ஸ்டார்ட் - செல்ஃப் / கிக்

POST COMMENTS VIEW COMMENTS