மஹிந்திரா ‘மோஜோ’ 300சிசி அசத்தும் பைக்: விலையுடன் போட்டோ கேலரி!


மஹிந்திரா நிறுவனம் ‘யு300’ என்ற புதிய மாடல் பைக்கை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

டிராக்டர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பிரபல நிறுவனமாக திகழும் மஹிந்திரா நிறுவனம், கடந்த சில வருடங்களாக பைக்களை வெளியிடுவதிலும் மும்முரம் காட்டி வருகிறது. அதன்படி இந்திய வாடிக்கையாளர்கள் சந்தைக்கு ஏற்றவாறு விலையில் மஹிந்திரா யு300 என்ற புதிய மாடல் பைக்கை வெளியிட்டுள்ளது. இந்த பைக் 300சிசி இன்ஜின் திறன் கொண்டது. 525 கிலோ மீட்டர் வரை இதை நிறுத்தமால் ஓட்டமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதன் பெட்ரோல் டேங்க் 21 லிட்டர்கள் பிடிக்கும். லிட்டருக்கு 25 கி.மீ மைலேஜ் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகத்தை கூட்டுவதற்கு ஏற்ற வகையில் இதில் 6 கியர்கள் வழங்கப்பட்டுள்ளது. அதிவேக சைலென்ஸர் குளிர்விப்பான், செல்ஃப் ஸ்டார்ட், அலாய் வீல்ஸ், டிஜிட்டல் ஸ்பீடாமீட்டர், டிஸ்க் ப்ரேக் உள்ளிட்டை உள்ளன. இதன் எடை 163 கி.மீ ஆகும். சென்னையில் இதன் விலை ரூ.1.63 லட்சம்.

POST COMMENTS VIEW COMMENTS