வெளியானது சாம்சங் கேலக்சி எஸ்9


சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ் 9 ரக மொபைல்போனை வெளியிட்டுள்ளது. 

வழக்கமான வசதிகளுடன் கூடவே, ஆக்மென்டட் ரியாலிட்டி (Augmented Reality) எனப்படும் மிகை மெய்நிகர்த் தொழில்நுட்ப அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் புகைப்படங்களை அழகிய எமோஜிக்களாக மாற்றி அதை நண்பர்களுடன் பகிர முடியும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் திறன்பேசியின் கேமராவைப் பயன்படுத்தி, வெளிநாட்டு மொழிகளையும் உடனடியாக மொழிமாற்றம் செய்ய இயலும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

முந்தைய வெளியீடான S8 ரகத் திறன்பேசியைக் காட்டிலும் மேம்பட்டுள்ள ஒலியையும் வேகத்தையும் S9 கொண்டுள்ளது.

இந்த புதிய சாம்சங் மாடலில் உயர் ரக கேமரா சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குறைந்த ஒளியிலும் சிறப்பாக போட்டோ எடுக்க முடியம். இருட்டில் எடுக்கப்படும் படங்களும் துல்லியமாகத் தெரியும். அதோடு ’ஸ்லோமோசன்’ வீடியோ எடுக்கும் வசதியும் உள்ளது. 


 

POST COMMENTS VIEW COMMENTS