”செல்போஃனே முக்கியம்..காதலியோ ,மனைவியோ வேண்டாம் “


ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பழக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுவிதமாக போன்களை தேடிப்பிடித்து பயன்படுத்த தற்போதைய இளைஞர்கள் தவறுவதே இல்லை. வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இந்த ஸ்மார்ட்போன் மாறிவரும் சூழலில் உலக அளவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், இந்தியர்களில் 53 சதவீதத்தினர் குறைவாக செல்போன் பயன்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்தனர். செல்போனை பாகெட்டிலோ, வீட்டிலோ வைத்து விட்டால் மீண்டும் எப்போது பயன்படுத்துவோம் என்ற எண்ணம் 46% பேருக்கு இருப்பதாக தெரிவித்தனர். இவற்றையெல்லாம் தாண்டி 76% இந்தியர்கள் தங்களது மொபைல் போன்களோடு உணர்வுப் பூர்வமாக இருப்பதோடு, மொபைல் ஒருவேளை தொலைந்துவிட்டால் மிகுந்த பயம் தொற்றிக் கொள்வதாகவும் தெரிவித்தனர். அதோடு தங்களது காதலியோ அல்லது மனைவியோ இல்லாவிட்டாலும் கூட , செல்போன் இருந்தால் அவர்கள் இல்லாதது தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர்

உலக அளவில் செல்போனோடு அதிக அளவில் உணர்வுப்பூர்வ பந்தத்தை வைத்திருப்பதில் இந்தியர்களுக்கே முதலிடம் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. மேலும் 33% பேர் அதிக நேரம் செல்போனே கதி என்று இருப்பதாக தெரிவித்தனர். அவர்க்ளில் பாதிக்கும் மேல் 1990-2000 ஆண்டுகளில் பிறந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. செல்போனே கதி என்றும் காதலியும் மனைவியும் தேவையில்லை என்றும் மாறிவருகிறது இளைஞர் சமூகம்.

POST COMMENTS VIEW COMMENTS