மைக்ரோசாப்ட் மென்பொருள்களில் 15 இந்திய மொழிகள்


மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக பயன்பாட்டில் உள்ள மென்பொருள்களில் 15 இந்திய மொழிகளை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்திய கணினி பயனாளர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்டில் அதிக பயன்பாட்டில் இருக்கும் மென்பொருள்களில் 15 இந்திய மொழிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்மூலம் மின்னஞ்சல் முகவரிகள் உள்ளூர் மொழிகளில் மைக்ரோசாப்ட் அவுட்லுக்கில் சேமிக்கப்பட்டு, தனிப்பட்ட கணினிகளில் இருந்து மின்னஞ்சல்களை அனுப்பும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இந்த மொழிகள் தற்போது பயன்பாட்டில் உள்ள  ஆபீஸ் 365, அவுட்லுக் 2016 ஆகிய மென்பொருள்களில் வேலை செய்யும். சர்வதேச தாய் மொழி தினத்தில் இந்த அறிவிப்பை மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.
 

POST COMMENTS VIEW COMMENTS