எம்ஐ மேக்ஸ் 3: எல்லாமே லேடெஸ்ட் தான்!


5500 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1, 7 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது ஜியோமி மேக்ஸ் 3.

இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ள செல்போன் நிறுவனம் ஜியோமி. இதன் அனைத்து மாடல்களும் குறைந்த விலையில், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வெளி வருகின்றது. இதனால் வாடிக்கையாளர்களிடம் தனி மசவுசை பிடித்துள்ளது ஜியோமி. இதற்கு எடுத்துக்காட்டாக ஜியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள ரெட்மி மாடல்கள் அனைத்தும் அதிகளவில் விற்பனை அடைந்துள்ளது. இதனால் முன்னணி நிறுவனங்களையும் இந்திய சந்தையில் ஜியோமி பின்னுக்கு தள்ளியுள்ளது.

இந்நிலையில் ஜியோமி வெளியிடவுள்ள மேக்ஸ் 3 மாடல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதற்கு முன் வெளியிடப்பட்ட மேக்ஸ் 2 வின் அடுத்த கட்டமாக மேக்ஸ் 3 இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் மேக்ஸ் 3 உருவாகியுள்ளது. இதன் பேட்டரி திறன் 5500 எம்ஏஎச் ஆகும். இதனால் 3 நாட்கள் வரை சார்ஜ் போடாவிட்டாலும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகாமல் செயல்படும். 7 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேவுடன், ஆண்ட்ராய்ட் 8.1 வெர்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஐஎம்எக்ஸ்363 கேமரா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வந்த ஜியோமி போன்களில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வோயர்லெஸ் சார்ஜ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கண் வளையத்தை ஸ்கேன் செய்யும் மொபைல் லாக் சிஸ்டம் உள்ளது. முன்புறத்தில் ஒரு செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இது வெளியாகும் தேதியும், விலையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
 

POST COMMENTS VIEW COMMENTS