13 எண்கள் மொபைல் நம்பர்: வதந்தி!


மொபைல் சிம் எண்கள் இனி 13 இலக்கத்துடன் வெளியாகும் என்று அறிவிப்பு வதந்தி என தெரியவந்துள்ளது.

செல்போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் அனைத்து சிம் கார்டுகளும் 10 இலக்க எண்களையே கொண்டதாகும். வாடிக்கையாளர்களும் 10 இலக்க மொபைல் எண்களை உபயோகித்து பழகிவிட்டனர். இந்நிலையில் 10 இலக்க மொபைல் எண்களை 13 இலக்கங்களாக மாற்றுமாறு சிம் நிறுவனங்களுக்கு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் பரவியது. 

இந்த தகவல்படி, “ஜூலை 1ஆம் தேதி முதல் வெளியாகும் மொபைல் எண்கள் 13 இலக்கங்களுடன் வெளியாகும். ஆனால் ஏற்கெனவே உள்ள 10 இலக்க மொபைல் எண்களும் செயல்படும். அத்துடன் 10 இலக்க மொபைல் எண்ணை 13 இலக்கமாக மாற்றுவதற்கு, வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும்” என்று கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல்கள் வெறும் வதந்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS