வியூவ் இமேஜ் ஆப்ஷனை நீக்கியது கூகுள்: நெட்டிசன்கள் அதிருப்தி!


கூகுள் தனது இமேஜ் தேடும் பகுதியில் வியூவ் இமேஜ் ஆப்ஷனை நீக்கியுள்ளது.

இணையதளம் பயன்பாட்டாளர்கள் எந்த ஒரு போட்டோ வேண்டுமானாலும், அதை கூகுளில் தேடி வியூவ் இமேஜ் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி பதிவிறக்கும் செய்யும் வசதி நேற்று வரை இருந்தது. ஆனால் இன்று முதல் அந்த வசதியை கூகுள் நிறுவனம் நீக்கிவிட்டது. இதனால் இணையதள பயன்பாட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள கூகுள் நிறுவனம், எந்த ஒரு புகைப்படமும் அதன் உரிமை தாரரின் அனுமதி இல்லாமல், யாரும் பயன்படுத்தும் நிலையை தடுக்கவே இமேஜ் வீயூவ் ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கெட்டி இமேஜஸின் வேண்டுகோள் படி இந்த வசதி நீக்கப்பட்டுள்ளது. இதனால் இனி கூகுளில் இமேஜை தேடும் பயன்பாட்டாளர்கள் அதனை வியூவ் ஆப்ஷனை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்ய முடியாது. காப்புரிமை பெற்றால் மட்டுமே இமேஜை பெற முடியும்.

POST COMMENTS VIEW COMMENTS