50% கேஷ்பேக் சலுகையில் ஜியோ போன்..!


ரிலையன்ஸ் ஜியோவின் வோல்ட் போன் அமேசான் தளத்தில் 50% கேஷ்பேக் சலுகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின்  வோல்ட் இ ஃபீச்சர்போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ.1,500 முன் பணமாக செலுத்த வேண்டும் எனவும் இந்தத் தொகை 36 மாதங்களுக்கு பின் திரும்ப வழங்கப்படும் என்றும் ஜியோ அறிவித்திருந்தது.

இதையடுத்து முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை விறுவிறுப்படைந்தது. அதிகப்படியான விற்பனையை தொடர்ந்து வோல்ட் போன் விற்பனையை ஜியோ நிறுத்தியது. 

இந்நிலையில் தற்போது ஜியோ நிறுவனம் அமேசானில் மீண்டும் வோல்ட் போன் விற்பனையை தொடங்கிவுள்ளது. இதில் ரூ.1,500 முன்பணமாக செலுத்த வேண்டும். இந்த தொகை 36 மாதங்களுக்கு பின் திரும்ப வழங்கப்படும் என ஜியோ தெரிவித்துள்ளது. அமேசான் பே மூலம் பணம் செலுத்துவோருக்கு அமேசான் சார்பில் ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று அமேசான் பே மூலம் ரீசார்ஜ் செய்வோருக்கு 50% கேஷ்பேக் வழங்கப்படுகின்றன. இந்தச் சலுகைகள் பிப்ரவரி 28-ம் தேதி வரை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS