தேடுதளத்தில் பாரபட்சம்: கூகுளுக்கு ரூ.135.86 கோடி அபராதம்!


கூகுள் தேடுதளத்தில் நிறுவனங்களுக்கு பாரபட்சம் காட்டியதாகப் பதிவு செய்யப்பட்ட புகாரில், அந்த நிறுவனத்துக்கு 135 கோடியே 86 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேட்ரிமோனி டாட் காம் என்ற நிறுவனத்தின் பெயரைத் தேடித் தருவதில் கூகுள் நிறுவனம் பாரபட்சம் காட்டியதாக கடந்த 2012ம் ஆண்டு புகார் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த இந்திய நிறுவன போட்டி கண்காணிப்பு ஆணையம், அதிகமானோர் கூகுள் தேடுதளத்தை பயன்படுத்துவதை சாதகமாகக் கொண்டு அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறியுள்ளது.

எனவே, இந்தியாவில் கூகுள் நிறுவனத்துக்குக் கிடைக்கும் வருவாயின் அடிப்படையில்135 கோடியே 86 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
 

POST COMMENTS VIEW COMMENTS