ஆன்லைனில் கசிந்த ‘நோக்கியா 7 ப்ளஸ்’ சிறப்பம்சங்கள்!


நோக்கியா வெளியிடவுள்ள 7 ப்ளஸ் மாடல் ஸ்மார்ட்போனின் தகவல்கள் மற்றும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.

பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியா ‘7 ப்ளஸ்’ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. இதனை வரும் 25ஆம் தேதி பார்சிலோனாவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டு, வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் இதன் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

அதன்படி நோக்கியா 7 ப்ளஸ் போனில், 12 மற்றும் 13 எம்பி பின்புற இரட்டை கேமராக்களும், 16 எம்பி முன்புற செல்ஃபி கேமராவும் உள்ளது. ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தில் வெளிவர இந்த போனில், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர கூடுதலாக 128 ஜிபி வரை மைக்ரோ கார்ட் பொருத்திக்கொள்ள முடியும். 6 இஞ்ச் டிஸ்ப்ளேவுடன் கொரிலா க்ளாஸ் புரொடக்‌ஷனும் வழங்கப்படுள்ளது. 
 

POST COMMENTS VIEW COMMENTS