ப்ளூடூத் வசதியுடன் டிவிஎஸ் என்டார்ச் 125


ஆட்டோ மொபைல் நிறுவனமான டிவிஎஸ் என்டார்ச் 125 என்ற புதிய ஸ்கூட்டரை இன்று வெளியிட்டுள்ளது.

ஸ்கூட்டர்கள் முன்பெல்லாம் மகளிருக்காக வெளியிடப்பட்டது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஸ்கூட்டர்களை இளைஞர்களும் மிகுதியாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக ஹோண்டா டியோவிற்குப் பிறகு இளைஞர்கள் மத்தியில் ஸ்கூட்டர் மோகம் அதிகரித்துவிட்டது என்று கூறலாம். இந்நிலையில் 18-24 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்களை கவரும் வகையில் டிவிஎஸ் நிறுவனம் புதிதாக என்டார்ச் 125 ஸ்கூட்டரை இன்று வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் செல்போனுடன் இணைக்கும் ப்ளூடூத் வசதி கொடுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. இதன்மூலம் கடைசியாக பார்க்கிங் செய்யப்பட்ட இடத்தை அறியமுடியும்.

இதன் விலை ரூ.58,790 ஆகும். டிஜிட்டல் வசதிகளுடன் வெளியாகியுள்ள இதில், 124.79 சிசி கொண்ட ஏர் கூல் இன்ஜியன் உள்ளது.

ஒரு சிலிண்டருடன் 4 ஸ்ட்ரோக் தொழில்பட்டத்துடன் இது இயங்கும். இதன் அதிகபட்ச வேகம் 95 கி.மீ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேக பதிவு, சர்வீஸ் ரிமைண்டர், இன்ஜியன் ஆயில் வெப்பநிலை உள்ளிட்ட நவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் எல்இடி விளக்குகள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன. 

POST COMMENTS VIEW COMMENTS