ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரத்தை குறைத்த மக்கள்..!!!


கடந்த 3 மாதங்களில் ஃபேஸ்புக்கில் அதிக நேரங்களை செலவுசெய்யும் பயனாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதை வரவேற்றுள்ளார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பர்க்.

சமூகவலைத்தளங்களில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஃபேஸ்புக் செயலியின் பயனாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதற்கேற்ப வகையில் ஃபேஸ்புக் செயலியும் புதிய புதிய அப்டேட் வசதிகளுடன் வளர்ச்சியடைந்து கொண்டே வருகிறது.

கடந்த ஜனவரி மாதம்  பேஸ்புக் நிறுவனம் நியூஸ்ஃபிட் பக்கத்தில் சில மாற்றங்களை கொண்டு வர உள்ளதாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு என்னவென்றால் நியூஸ்ஃபிட் பக்கத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்ச விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். இதன்பின் தேவையற்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் குறைக்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்புக்கு முன்பாகவே ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரம் கணிசமாக குறைய தொடங்கியதாக ஃபேஸ்புக் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கில் உபயோகிக்கும் பயனாளர்களின் நேரம் குறைந்தை குறித்து மார்க் ஜுக்கர்பர்க், பேஸ்புக்கில் செலவழிக்கும் நேரத்தை அதிகரிப்பதை விட மக்களை ஃபேஸ்புக்கில் இணைக்க வைப்பதே மிக முக்கியம். மக்கள் அனைவரும் சமூக நலக்காக ஒருகிணைந்து ஃபேஸ்புக்கில் செயல்பட வேண்டும். இதன்மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்தும் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் இணைப்பதே முக்கியதுவமாக கருதபடுவதாக அவர் கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS