ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: மார்க் மகிழ்ச்சி!


ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க் தெரிவி‌த்துள்ளார். 

கடந்த 2017ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பல்வேறு வழிகளில் வலிமையான ஆண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார். மாதந்தோறும் 2 பில்லியனுக்கும் அதிகமானோரும், நாள்தோறும் 1.4 பில்லியன் பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‌ஃபேஸ்புக் நிறுவனம் 47 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ள மார்க் ஸூக்கர்பெர்க், தங்களது ஊழியர்களின் பணியினால் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பயன் அடைவது தன்னை பெருமை அடைய செய்வதாகவும் கூறியுள்ளார்.
 

POST COMMENTS VIEW COMMENTS