சந்திர கிரகணத்தை பார்க்கலாமா? வேண்டாமா? வெதர்மேன் கூறுவது..


150 ஆண்டுகளுக்கு பிறகு 3 அரிய நிகழ்வுகளுடன் இன்று முழு சந்திர கிரகணம் நடக்க உள்ளது. 

இன்று மாலை 6.25 மணிக்குத் தொடங்கும் சந்திர கிரகணம் 7.25 மணி வரை நீடிக்கும். வழக்கமாக வரும் சந்திர கிரகணத்தின்போது
தோன்றுவது போல அல்லாமல், இந்தமுறை புளூ மூன், ப்ளெட் மூன் மற்றும் சூப்பர் மூன் ஆகிய மூன்று வகையில் சந்திரன் காட்சி
அளிக்கும். அந்த நேரத்தில் கடலிலும், ஆறுகளிலும் அலைகள் சற்று அதிக உயரத்துக்கு எழும் என்றும், இருப்பினும் பயப்படும்
அளவுக்கு ஒன்றும் இருக்காது எனவும் வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த சந்திர கிரகணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், இது ஒரு அருமையான சந்திர கிரகணம்
இதை அனைவரும் காணலாம் என்று கூறியுள்ளார். அத்துடன் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் என யார்
வேண்டுமானாலும் இதை காணலாம் எனவும், சில மூடநம்பிக்கைகளை விடுத்து இந்த அரிய சந்திர கிரகணத்தை குடும்பத்தினர்
மற்றும் நண்பர்களுடன் கண்டு மகிழுங்கள் என்றும் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் தெரியும் இந்த சந்திர கிரகணத்தை வெறும்
கண்களாலேயே பார்க்கலாம் என வானியல் வல்லுனர்களும் கூறியுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS