வருகிறது ஹையோசங் ஜிடி250ஆர்! விலை என்ன?


டிஎஸ்கே ஹையோசங் ஜிடி250ஆர் பைக் வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

கொரியன் பைக் உற்பத்தி நிறுவனமான ஹையோசங், இந்தியாவில் டிஎஸ்கே மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து பைக்குகளை உற்பத்தி செய்து வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் அதிவேகமாக செல்லும் பல பைக்குகள் இந்தியாவில் வெளிவந்துள்ளன. அதிவேக பைக்குகள் என்றால் இளைஞர் மத்தியில் தனி மவுசு உண்டு.

இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹையோசன் ஜிடி250 ஆர் பைக் 250 சிசி இன்ஜினுடன் உடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனை கவாஸ்கி நிஞ்ஜா 250ஆர் பைக்குக்கு போட்டியாக தயாரித்துள்ளனர். 5 கீர்களுடன் வெளியாகவுள்ள இந்த பைக், சாலையில் சாய்ந்து ஒட்டுவதற்கும் ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. அலாய்வீல்ஸ், அதிநவீன பிரேக் உள்ளிட்ட வசதிகளும் இதில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.3.45 லட்சம் ஆகும். 

இதனுடன் ஹையோசங் அக்யூலா ப்ரோ என்ற மற்றோரு பைக்கும் வெளியாகவுள்ளது.

ஜிடி250ஆர் மாடலுக்கு அடுத்தகட்டமாக இந்த பைக் இருக்கும். அதைவிட அனைத்திலும் சற்று கூடுதலான வசதிகள் கொண்ட இதன் இன்ஜின் 300 சிசி கொண்டது. இதன் விலை ரூ.5.36 லட்சம் ஆகும். 

POST COMMENTS VIEW COMMENTS