அமேசான் அலுவலகத்துக்குள் வந்த அமேசான் காடு..!!


உலகில் உள்ள பெரிய நிறுவனங்கள் தனங்களுகென தனித்த அடையாளம் கொண்ட புதிய அலுவலகத்தை கட்டுவது என்பது டிரெண்ட்டாகி வருகிறது. அந்த வகையில் மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், ஆப்பிள் என பல நிறுவனங்கள் தனக்கென தனித்த அடையாளம் கொண்ட அலுவலகத்தை வடிவமைத்து கட்டிவருகின்றன. அதில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலிடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனம் ஒரு புதிய அலுவலகத்தை வடிவமைத்து கட்டி வருகிறது.

மிகப் பெரிய காட்டினை அமேசான் நிறுவனம் தனது புதிய அலுவலகத்துக்குள் அமைத்துள்ளது. மூன்று பெரிய குருவிக்கூடு போன்று கோபுரங்களைக் கொண்ட அலுவலகமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் இருந்து 40,000 செடி மற்றும் மரங்களை எடுத்து வந்து இந்த அலுவலகத்திற்குள் நட்டுள்ளனர். அதற்காக தாவர வல்லுநர்களை வைத்து இந்த அலுவலகத்தை கட்டமைத்துள்ளனர். இன்னும் சிறிது நாட்களில் அந்த செடிங்கள் அனைத்தும் வளர்ந்து ஒரு பெரிய மரமாகி அமேசான் காடு போல் அலுவலகத்தை மூடி விடும்.

 

குருவிக்கூடு போன்று அமைக்கப்பட்ட ஒவ்வொரு கோபுரத்தில் மெத்தம் 800 பேர் வரை அமர்ந்து வேலைப்பர்க்கலாம். அதை போன்று இவை அமைக்கப்பட்டுள்ளன. இதற்குள் பெரிய பெரிய மரங்கள் உள்ளன. ஆங்காங்கே சிறுசிறு அருவிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த அருவிகளை பார்த்து கொண்டே வேலை செய்யும் ஊழியர்களுக்கு வேலை பார்க்கும் உணர்வு இருக்காது. ஜாலியாக காட்டிற்குள் இருக்கும் உணர்வை தருவது போல் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS