ஃபேஸ்புக் செயலிழந்ததா...?


இரண்டு நாட்களாக குறிப்பிட்ட சில நேரத்தில் மட்டும் ஃபேஸ்புக் பக்கம் செயலிழந்திருப்பதாக ஆய்வு அறிக்கை ஒன்று அறிவித்துள்ளது.

உலக அளவில் சமூக வலைத்தளங்களில் முன்னோடியாக விளங்குவது ஃபேஸ்புக் நிறுவனம். அனைத்து தரப்பு மக்களாளும் ஈர்க்கப்பட்ட ஃபேஸ்புக் கடந்த வியாழக்கிழமை அன்று சில நேரங்கள் மட்டும் செயலிழந்து காணப்பட்டதாக ஆய்வு அறிக்கை ஒன்று அறிவித்துள்ளது. இதே பிரச்னை இன்று 1 மணியளவிலும் நிகழ்ந்துள்ளது. 

இதனால் அமெரிக்காவில் ஃபேஸ்புக் உபயோகிப்பவர்கள் கடுமையாகப் பதிக்கப்பட்டனர். மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள பலரும் பல மணி நேரங்களுக்கு ஃபேஸ்புக் தளத்தில் நுழைய முடியவில்லை. அமெரிக்க மட்டுமின்றி யூகே, ஜெர்மனி போன்ற நாடுகளில் சில மணி நேரங்களுக்கு ஃபேஸ்புக் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சிக்கல் டெஸ்க்டாப் மற்றும் ஆப் பயன்படுத்தும் இரு தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்த முடியாமல் மிகவும் ஏமாற்றம் அடைந்த பயனாளர்கள் தன் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ட்விட்டரில் சென்று #facebookdown என்ற ஹேஸ்டேக்-கை பதிவு செய்தனர். 
 

POST COMMENTS VIEW COMMENTS