ரூ.49க்கு ஒரு மாதம் 4ஜி டேடா! ஜியோ அதிரடி ஆஃபர்!


குடியரசு தினத்தை முன்னிட்டு ரூ.49க்கு புதிய ப்ளான் ஒன்றை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோவின் வருகைக்கு பிறகு ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா ஆகியவை இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் என அனைத்து நிறுவனங்களும் ஜியோவிற்கு ஈடு கொடுக்கும் வகையில் அதிரடி ஆஃபர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜியோஃபோன் வாடிக்கையாளர்களுக்கு, அந்நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ரூ.11, ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101க்கு ஜியோ பல புதிய ஆஃபர்களை அறிவித்துள்ள நிலையில், அனைத்தையும் மிஞ்சும் வகையில் இந்த புதிய ஆஃபர் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.49க்கு தினந்தோறும் 1ஜிபி 4ஜி டேடா மற்றும் அன்லிமிடெட் இலவச அழைப்புகளை 28 நாட்களுக்கு பெறலாம். இதில் 1ஜிபி 4ஜி டேடா ஒரு தினத்தில் தீர்ந்து விட்டால், பின்னர் குறைவான வேகத்தில் டேடா சேவை வழங்கப்படும்.  

POST COMMENTS VIEW COMMENTS