வைரலாகும் கூகுள் ஆர்ட்ஸ் செல்ஃபி!


செல்ஃபி பிரியர்களின் கவனத்தைப் பெற்ற கூகுள் ஆர்ட்ஸ் செல்ஃபி, இந்த வாரத்தின் இணைய வைரலில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கூகுள் நிறுவனத்தின், ’கூகுள் ஆர்ட்ஸ் அண்ட் கல்சர் ஆப்’ ஆரம்பத்தில் அதிக கவனத்தை ஈர்க்காமல் இருந்தது. அதன் பின்பு பயனாளர்களின் கவனத்தை ஈர்க்க சில புதுமைகள் புகுத்தப்பட்டன. இந்தப் புதிய அப்டேட் பயனாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல், கடந்த ஒரு வாரத்தில் மட்டும்  இந்தச் செயலியை தரவிறக்கம் செய்தோர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. 

தற்போது, இந்தச் செயலி அமெரிக்காவில் நம்பர் 1 ஆப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தச் செயலியில், உலகத்தில் இருக்கும் புகழ்பெற்ற 1200 அருங்காட்சியகங்களில் இருக்கும் புகழ்பெற்ற அறிஞர்கள், விஞ்ஞானிகள், கலையுலகத்தினர், சாதனையாளர்கள், போராளிகள் என அனைவரின் ஓவியங்கள் இடம்பெறுகிறது. இந்த ஓவியத்தில் இருப்பவர்களின் முகத்தில், பயனாளர்கள் தங்களின் முகத்தை செல்ஃபி மூலம் மாற்றிக் கொள்ளலாம். இதில் செல்ஃபி எடுத்த அனைவரும் தங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

POST COMMENTS VIEW COMMENTS