விண்வெளியில் சதமடித்தது இஸ்ரோ!


இந்தியாவின் 100 ஆவது செயற்கைக்கோளான கார்டோசாட் 2, ஸ்ரீஹரிகோட்டா தளத்தில் இருந்து இன்று விண்வெளியில் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டைச் சேர்ந்த 28 செயற்கை கோள்கள் உட்பட மொத்தம் 31 செயற்கை கோள்களை, பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதில் 710 கிலோ எடைகொண்ட கார்டோ சாட் 2 செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இது இஸ்ரோ அனுப்பும் 100-வது செயற்கைகோள். தகவல் தொடர்பு, போக்குவரத்து போன்றவற்றை மேலும் மேம்படுத்தும் வகையில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் இந்த செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியை துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது, இந்தியா தயாரித்துள்ள இந்த கார்டோசாட் 2 செயற்கை கோள். 

இந்த ராக்கெட் இன்று காலை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 31 செயற்கைக்கோள்களில், 28 செயற்கைக்கோள்கள், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பின்லாந்து, கொரியா, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்தவை.

POST COMMENTS VIEW COMMENTS