ஃப்ளிப்கார்டில் ஆப்பிள் போன்களுக்கு ரூ 9000 வரை கேஷ் பேக் ஆஃபர் 


ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் ஐபோன் பிரியர்களுக்காக ’ஆப்பிள் வீக்’என்ற சேவை ஆரம்பித்துள்ளது. 

புகழ்பெற்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் ஜனவரி 9 முதல் ஜனவரி 15 ஆம்  தேதி வரை ’ஆப்பிள் வீக்’ என்ற புதிய சேலை ஆரம்பித்துள்ளது. இந்த விற்பனையில் பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ஃபோன்கள், வாட்ச்கள், ஐபேட்கள் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதே போல் ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்ட்டை பயன்படுத்துவோர்க்கு கேஷ் பேக் ஆஃபரையும் அறிவித்துள்ளது. ஃப்ளிப்கார்டின் இந்த அதிரடியான சேலில் விலை குறைக்கப்பட்டுள்ள ஐபோன்களின் விவரங்கள் கீழே இடம்பெற்றுள்ளன.

ஐபோன்8 மற்றும் ஐபோன்8 ப்ளஸ்:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்8, 64 ஜிபி இதன் உண்மையான விலையான 54,999 ரூபாயில் இருந்து ரூ.9000  தள்ளுபடியில் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், ஐபோன்8 ப்ளஸ் 73,000 ரூபாயில் இருந்து 8 சதவீத தள்ளுபடியில் ரூ. 66,499க்கு விற்பனையாகிறது. இரண்டு மொபைல் போன்களையும் ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 8000 ரூபாய் வரை கேஷ் பேக் ஆஃபரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 2

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 2 வின் 42எம்எம் சைஸ் அதன் உண்மையான விலையான, 33,500 ரூபாயில் இருந்து, 24,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதுபோன்று ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு ஐஃபோன் மாடல்கள் மற்றும் வாட்ச்கள் ஆகியவை இந்த ஆப்பிள் வீக்கில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS