சாம்சங் நோட்புக் 7 ஸ்பின்(2018) சிறப்பம்சங்கள்..


சாம்சங் நிறுவனத்தின் ’நோட்புக் 7 ஸ்பின்’ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் அதிநவீன வசதிகள் உடைய புதிய நோட்புக் ஒன்றை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது. நோட்புக் 7 ஸ்பின் என்ற அந்த மாடல், 360 டிகிரி மடக்கக்கூடிய தன்மை கொண்டது. அதில் அக்டிவ் பென் மற்றும் கைரேகை விரல் மூலம் அனலாக் செய்யும் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 ஹலோ இயங்குதளம் கொண்ட இந்த நோட்புக்கை முதற்கட்டமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இவற்றுடன் மேக்கிங் ஸ்கெட்ச், ஸ்டூடியோ ப்ளஸ் உள்ளிட்ட வசதிகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. 13.3 இன்ச் எச்டி டிஸ்ப்ளே மற்றும் வெப்பத்தை குறைக்கும் சாதனங்களும் உள்ளது. மேலும் டச் பேட், மைக்ரோஃபோன் ஆடியோ ரெகார்டர், முன்புற கேமராவுடன் வீடியோ கால் பேசும் வசதி ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. இதன் எடை 1.53 கிலோ கிராம் ஆகும். 

POST COMMENTS VIEW COMMENTS