4 ஜிபி ரேம் உடன் வரும் சாம்சங் ‘கேலக்ஸி ஆன்7 ப்ரைம்’..!


சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஆன்7 ப்ரைம் என்ற புதிய மாடல் ஃபோனை அடுத்த வாரம் வெளியிடவுள்ளது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி மாடலுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் ஒரு புதிய மாடல் ஸ்மார்ட்ஃபோனை வெளியிடவுள்ளது. அது தான் ‘கேலக்ஸி ஆன்7 ப்ரைம்’. ஜனவரி 2வது வாரத்தில் இது இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதில் 13 எம்பி பின்புற கேமரா மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.

5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே கொண்ட இந்த மாடல், இந்திய மதிப்பில் ரூ.15 ஆயிரம் மதிப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர விலையை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கே இந்த விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அத்துடன் இது இரண்டு ரகங்களில் வெளியாகவுள்ளது. முதல் ரகத்தில் 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் இரண்டாம் ரகத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது அமேசான் இணையதளத்தில் மட்டும் சிறப்பு வெளியீடுடாக விற்பனைக்கு வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS