மைக்ரோ மேக்ஸ் பாரத் 5 ப்ளஸ்: சிறப்பம்சங்கள்!


மைக்ரோ மேக்ஸ் பாரத் 5 ப்ளஸ் புதிய மாடல் ஸ்மார்ட்ஃபோனை வெளியிடவுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பாரத் 5 என்ற ஸ்மார்ட்ஃபோனை வெளியிட்டது. அதன் விலை ரூ.5,555 ஆகும். தற்போது இதற்கு அடுத்த மாடலாக பாரத் 5 ப்ளஸ் என்ற மாடலை மைக்ரோ மேக்ஸ் வெளியிடவுள்ளது. 

இந்நிலையில் பாரத் 5 சிறப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 1 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 64 ஜிபி மைக்ரோ கார்டு பொறுத்திக்கொள்ளலாம். பின்புறத்தில் 8 எம்பி கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. இவற்றுடன் 5,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு வெளிவந்த பாரத் 5 மற்றும் பாரத் 5 ப்ளஸ் இடையே, 16 ஜிபி ஸ்டோரேஜுக்கு மாற்றாக 32 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளதே வித்யாசமாகும்.

POST COMMENTS VIEW COMMENTS