ரூ.5 ஆயிரத்தில் ஆண்ட்ராய்டு ஓரியோ ஃபோன்!


இந்தியாவில் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் முதலில் வெளியிடுகிறது.

இந்தியாவில் தற்போது வரை வெளிவந்துள்ள ஆண்ட்ராய்டு ஃஸ்மார்ட்போன்கள் ‘ஆண்ட்ராய்டு நாகட்’ இயங்குதளம் வரையில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆண்ட்ராய்டின் அடுத்தகட்டமான ‘ஆண்ட்ராய்டு ஓரியோ’ மாடல் இந்தியாவில் வெளியாகவுள்ளது. இதனை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வரும் 26ஆம் தேதி தனது ஸ்மார்ட்ஃபோன் ஒன்றில் வெளியிடுகிறது.

அந்த போனின் விலை ரூ.5,000 என தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் குறைந்த வசதிகள் கொண்டதாக அந்த ஃபோன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 512 எம்பி முதல் 1 ஜிபி வரை ரேம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் குறைந்த விலையில் ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் தற்போது மைக்ரோமேக்ஸ் இந்த நடிவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS