வெளியானது லெனோவா கே320டி: விலை, சிறப்பம்சங்கள்!


லெனோவா நிறுவனத்தில் கே320டி மாடல் ஸ்மார்ட்ஃபோன் சீனாவில் வெளியாகியுள்ளது.

லெனோவா நிறுவனம் தனது அனைத்து கே மாடல் ஃபோன்களையும் சீனாவில் வெளியிட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லெனோவா கே320டி-யும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இது சீன சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கு இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரவுள்ளது.

இதன் விலை ரூ.10,000. இதில் ஆண்ட்ராய்டு 7.1.1 நாகட் மற்றும் 5.7 இன்ச் எச்.டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 2 ஜிபி ரேம், 32 ஜிபி இண்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. கூடுதலாக 128 ஜிபி வரை மைக்ரோ கார்டு உபயோகிக்கும் வசதியும் உள்ளது. பின்புறத்தில் 13 எம்பி மற்றும் 8 எம்பி உடன் இரண்டு கேமராக்களும், 13 எம்பி செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு கொண்ட 3000 எம்ஏஎச் பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS