விரைவில் 'ஹைக்'கில் பஸ், ரயில், மூவி டிக்கெட்!


ஹைக் மெசஞ்சர் செயலியில் 2018ஆம் ஆண்டு முதல் பஸ், ரயில், சினிமா டிக்கெட்டுகளை பதிவுசெய்யும் வசதி கொண்டுவரவுள்ளதாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

வாட்சப் மெசஞ்சர் போலவே, ஹைக் மெசஞ்சரும் அதிக மக்கள் பயன்படுத்தும் செயலியாக திகழ்கிறது. கடந்த 2012ஆம் ஆண்டு 2012 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த செயலியை தற்போது உலகம் முழுவதும் 100 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். சுமார் 350 ஊழியர்களுடன் டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய இரண்டு நகரங்களில் ஹைக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 

ஹைக் மெசஞ்சர் மட்டுமின்றி ஹைக் வாலட்டும் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதன் நிறுவனத் தலைவர் கவின் பார்தி மிட்டல், ஒரே மாதத்தில் ’ஹைக்’ வாலட்டில் 10 மில்லியன் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக கூறினார். அதில் 70% ரிசார்ஜ் பயன்பாட்டிற்காகவும், 30% இதர பரிமாற்றத்திற்காகவும் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். ஹைக் செயலை எளிமையாக பணப்பரிமாற்றம் மேற்கொள்ளும் வகையில் மேம்படுத்தியாதல் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் வரும் 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், கேப், பஸ், ரயில், திரைப்படம் மற்றும் கட்டணங்களை செலுத்தும் வகையில் ஹைக் செயலியை அப்டேட் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.  
 

POST COMMENTS VIEW COMMENTS