நள்ளிரவு வெளியாகும் ஒன் ப்ளஸ் 5டி எடிசன் மாடல் செல்ஃபோன்


ஒன் ப்ளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் லிமிடெட் எடிசன் செல்ஃபோன் நள்ளிரவு 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது.

ஒன் ப்ளஸ் 5டி லிமிடெட் எடிசன் மாடல் செல்போன் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் இந்திய சந்தைகளில் நள்ளிரவு12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.38,999 ஆகும். இதில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டெர்னல் ஸ்டோரஜ் வழங்கப்பட்டுள்ளது. மணற்கல் வெள்ளை நிற பேனல் உடன் வெளியாகும் இதில் 6.01 இன்ச் ஃபுல் எச்டி மற்றும் ஏஎம்ஓஎஇடி டிஸ்ப்ளே உள்ளது. இதன் டிஸ்ப்ளே கொரிலா க்ளாஸ் 5வுடன் பாதுகாப்பாக வடிவைக்கப்பட்டுள்ளது. 

இதன் பின்புற கேமரா 16 எம்பி லென்ஸ் உடனும், செகண்ட்ரி கேமரா 20 எம்பி லென்ஸ் உடனும் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் 16 எம்பி செல்பி கேமராவும் உள்ளது. மேலும் இதில் முகம் சோதனை அன்லாக் மற்றும் கைரேகை சோதனை அன்லாக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இது  நள்ளிரவு 12.01 மணி முதல் அமேசான் இணையதளத்தில் சிறப்பு விற்பனைக்கு வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS