ரெட்மி ஒய்1 புதிய மாடல் ஃபோன் வெளியாகியது: விலை, சிறப்பம்சங்கள்!


ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி ஒய்1 மற்றும் ஒய் லைட் மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள் இந்திய சந்தைகளில் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஜியோமி நிறுவனம் ரெட்மியின் ஒய்1 மற்றும் ஒய்1 லைட் புதிய மாடல் ஃபோன்களை இன்று விற்பனைக்கு வந்துள்ளது. இதனை அமேசான் மற்றும் எம்ஐ இணையதளங்களில் வாங்க இயலும். 

ரெட்மி ஒய்1 மாடல் இரு ரகங்களில் வெளியாகியுள்ளது. முதல் ரக ஒய்1 மாடல் 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ.8,999 ஆகும். உயர்தரமான இரண்டாம் ரகம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ.10,999 ஆகும். இந்த இரண்டு ரகத்திலும் 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 13 எம்பி பின்புற கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா ஃப்ளாஸ் லைட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் பின்புற விரல்ரேகை சோதனை வசதியும் உள்ளது. இதற்கு முன் வெளியிடப்பட்ட ரெட்மி ஒய்1 ரக ஃபோன்கள் அதிகம் சூடாகும் என்ற குறைகள் எழுந்ததால், இதில் ஃபோனின் சூட்டை குறைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி ஒய்1 லைட் மாடலை பொறுத்தவரை 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளேவுடன், 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 13 எம்பி பின்புற கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. ஒய்1 மற்றும் ஒய்1 லைட் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் 3080 ஏஎம்எச் பேட்டரி திறனும், 128 ஜிபி கூடுதல் ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
 

POST COMMENTS VIEW COMMENTS