“ஸ்டாலின் கைக் காட்டுபவரே அடுத்த பிரதமர்” - துரைமுருகன்


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவர் தான் அடுத்த பிரதமராக வருவார் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பாராட்டு தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் தென்காசியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன், “அகில இந்திய தலைவர்கள் எல்லாம் நீங்கள் இந்தியாவுக்கு வழிகாட்ட வேண்டும் என்று ஸ்டாலினிடம் கூறுகின்றனர். டெல்லி அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டாலின் உள்ளார் என்றும் மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாறோ அவர் தான் அடுத்த இந்தியாவின் பிரதமர்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே நெல்லை அருகே திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துரைமுருகன், “ஆணுக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்வது காட்டுமிராண்டித் தனம். காட்டுமிராண்டித் தனத்திற்கு சட்டமும் சிலரும் துணை போகிறார்கள்” என்றார். 

Read Also -> ‘குடியரசுத் தலைவர் ஆட்சி’ - தெலங்கானா எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

POST COMMENTS VIEW COMMENTS