பாஜக தலைவர் அமித் ஷாவின் பதவிக்காலம் நீட்டிப்பு?


அமித் ஷாவின் பதவிக் காலத்தை நீட்டிக்க பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு நாள் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இந்த கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷாவின் பதவிக் காலத்தை நீட்டிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமித் ஷாவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிகிறது. ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை அமித் ஷா பாஜக தலைவராக இருப்பதற்காக, உட்கட்சி தேர்தலை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு தேசிய செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்று கூறப்படுகிறது.

Read Also -> சசிகலா குடும்பத்தினரால் ஆபத்து ஏற்படும் என பலர் எச்சரித்தும் கவலைப்படவில்லை: ஐஜி ரூபா

POST COMMENTS VIEW COMMENTS