வரிகளை குறையுங்கள்.. பெட்ரோல் விலை தானாக குறையும் - ப.சிதம்பரம்


தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவது தவிர்க்க முடியாததா என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக சிதம்பரம் தனது ட்விட்டரில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார். “தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவது தவிர்க்க முடியாததா?. ஏனெனில், அதிகப்படியாக வரிகளால்தான் பெட்ரோல், டீசல் விலை கூடுகிறது. வரிகளை குறைத்தாலே, விலை தானாக குறையும். 

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி-யின் கீழ் உடனடியாக கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது. ஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகள் போலியாக வாக்குவாதம் செய்வதாக மத்திய அரசு குற்றம்சாட்டுகிறது. 19 மாநிலங்களில் ஆட்சி செய்வதை பாஜக மறந்துவிட்டது. மத்திய, மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டியில் கொண்டு வர வேண்டும்” என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாதமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 98 காசுகளும், டீசல் ஒரு லிட்டர் 3 ரூபாய் 57 காசுகளும்‌ உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்‌ரோல் விலை முதன்முறையாக ஒரு லிட்டர் 82 ரூபாயைத் தாண்டி விற்கப்படுகிறது. அதேபோல், டீசல்‌ விலையும் உயர்ந்து 75 ரூபாய் 19 காசுகளாக விற்கப்படுகிறது.‌

 

POST COMMENTS VIEW COMMENTS