“ரவிக்குமாருக்கு பாதுகாப்பு வழங்குக” - ஸ்டாலின் வலியுறுத்தல்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு உரிய பாதுகாப்பு அளித்து கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றுச் சித்தாந்தம் கொண்ட கருத்துகளுக்கு மதிப்பளித்து ஜனநாயக ரீதியாக கருத்துக்கு கருத்து என்ற பண்பட்ட முறையில் பதில் சொல்ல முடியாத சேத விரோதிகள் தலைதூக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தற்போது ரவிக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக வரும் செய்தி கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

ஆக்கப்பூர்வமாக கருத்துகளை தெரிவிப்பதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் அபாயகரமான போக்கு தமிழகத்தில் அதிகரித்திருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாத வன்முறையில் ஈடுபட நினைப்பவர்களை சட்டத்தின் துணை கொண்டு முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS