“ஸ்மார்ட் சிட்டி டெண்டருக்கு சிபிஐ விசாரணை” - ஸ்டாலின் வலியுறுத்தல்


தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் 10 மாநகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் அவற்றின் மின்னணு நிர்வாகம் தொடர்பான பணி அந்த வேலைக்கு தொடர்பே இல்லாத நிறுவனத்திற்கு வழங்க முயற்சி நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். விதிமுறைகளை மீறி டெண்டரில் குளறுபடிகள் செய்யப்படுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பும் உள்ள நிலையில் விதி மீறல்கள் குறித்து பிரதமரின் அலுவலகம் பாராமுகமாக இருப்பது ஏன் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி டெண்டர் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்

POST COMMENTS VIEW COMMENTS