18 எம்எல்ஏக்கள் வழக்கு: வாதங்கள் இன்று நிறைவு !


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதி முன்பான இறுதி நாள் வாதங்கள் இன்றுடன் முடிவடைய வாய்ப்புள்ளது. அவ்வாறு முடிக்கப்பட்டால் தீர்ப்பு ஒத்திவைக்கப்படும்.

கடந்த ஆண்டு சபாநாயகர் தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு, ஜூன் 14ஆம் தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், ஜூலை 23ஆம் தேதி முதல் மூன்றாவது நீதிபதி எம்.சத்யநாராயணன் விசாரித்து வருகிறார். 

மூன்றாவது நீதிபதி முன்பு தகுதிநீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோரும், சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், முதல்வர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதஹ்கி ஆகியோர் ஆஜராகி 12 நாட்களாக வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

13வது நாளான இன்று, சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் வாதங்கள் முன்வைத்து முடிக்க உள்ளார். இந்நிலையில் அவர் வாதங்களை நிறைவு செய்யும் பட்சத்தில், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்க வாய்ப்புள்ளது. எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்காதபட்சத்தில் வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதி எம்.சத்யநாராயணன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க வாய்ப்புள்ளது.

Read Aslo -> மந்திரவாதி சொன்ன மர்ம வார்த்தைகள்.. முகத்தில் தீ வைத்த பெண் !

POST COMMENTS VIEW COMMENTS