தினகரனின் எண்ணம் நிறைவேறாது: ஓபிஎஸ் 


நாடாளுமன்‌ற தேர்தலில் அதிமுக தலைமையிலா‌ன கூட்டணியே வெற்றி பெறும் என அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அதற்கான பணிகளை அதிமுக தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக எப்போதும் ஜெயலலிதாவின் கொள்கைகளை பின்பற்றி செயல்படும் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அதிமுகவை தங்கள் குடும்ப கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்ல டிடிவி தினகரன் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், தினகரன் எவ்வளவு முயன்றாலும், அவரது எண்ணம் நிறைவேறாது என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளா‌ர்.

POST COMMENTS VIEW COMMENTS