திமுகவின் 4 தூண்களை பாதுகாக்க வேண்டியது கடமை: ஸ்டாலின்


மக்கள் விரோத அரசுகளை தேர்தலில் வீழ்த்துவதே திமுகவின் இலக்கு என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம் என்ற திமுகவின் 4 தூண்களை பாதுகாக்க வேண்டிய கடமை தொண்டர்கள் அனைவருக்கும் உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து செயல்படுவதில் முனைப்பு காட்ட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், திறம்பட பணியாற்றி தேர்தல் களத்தில் வெற்றிகளை குவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS