திமுக நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்கவில்லை


சென்னையில் நடைபெறும் திமுக தலைவர் கருணாநிதியின் அஞ்சலி கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. 

சென்னையில் நடைபெறும் திமுக தலைவர் கருணாநிதியின் அஞ்சலி கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்ள உள்ளதாக நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அமித்ஷா கலந்து கொள்வது கடந்த சில நாட்களாகவே உறுதி செய்யப்படாமலே இருந்து வந்தது. பாஜவின் தமிழக தலைவர்களாக தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் அமித்ஷா வருவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்று கூறி வந்தனர். இருப்பினும், பாஜக சார்பில் ஏதேனும் ஒரு தேசிய தலைவர் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. 

                  

இந்நிலையில், கருணாநிதியின் அஞ்சலி கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்ளவில்லை என்றும் அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS