பாஜக எதிரிக் கட்சி கிடையாது: துரைமுருகன்


பாஜக எங்களுக்கு எதிர்க்கட்சி தான், எதிரிக் கட்சி இல்லை என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார்.

வேலூர் தமிழ்ச்சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், தமாகா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு தமிழ் அமைப்பினர் கலந்துகொண்டனர். 

               

இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவரும் திமுக முதன்மை செயலாளருமான துரைமுருகன் பேசும்போது, ’கலைஞர் எப்போதும் நகைச்சுவையுடன் பேசுவார். அடுத்தவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பார். மற்றவர்களிடம் கலந்தாலோசிக்கவும் அவர் தவறமாட்டார், அப்படிப்பட்டவர்களுக்கு தமிழ்சங்கம் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துகிறது. பாராளுமன்ற உறுப்பினரே அல்லாத ஒருவருக்கு இரண்டு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைத்தது இந்தியாவில் இதுதான் முதல் முறை. அதுபோல் மத்திய அரசுக்கும் எங்களுக்கு கொள்கை வேறுபாடு இருந்தாலும் பாஜகவை எதிரி என்று சொல்ல முடியாது. மத்தியில் உள்ள பாஜக எங்களுக்கு எதிர்க்கட்சி தான். ஆனால், எதிரி கட்சியில்லை’ என்றார். 

POST COMMENTS VIEW COMMENTS