டெல்லி ராம் லீலா மைதானத்தின் பெயரை மாற்றுவதா? கெஜ்ரிவால் விமர்சனம் 


டெல்லி, ராம் லீலா மைதானத்துக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை வைப்பதற்கு பதிலாக, பிரதமரின் பெயரை மாற்றலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவைத் தொடர்ந்து டெல்லி ராம் லீலா மைதானத்துக்கு அவரது பெயரை சூட்ட பாரதிய ஜனதா முடிவெடுத்திருருப்பதாக தகவல்கள் வெளியாயின. தேர்தல் ஆதாயத்துக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

 இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ராம் லீலா மைதானத்தின் பெயரை மாற்றுவதால் மட்டும் பாரதிய ஜனதாவுக்கு தேர்தலில் வெற்றிக் கிடைத்து விடாது என்றும், அதற்கு பிரதமரின் பெயரை மாற்றினால் அக்கட்சி எதிர்பார்ப்பது நடக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

 அதே சமயம் ராம் லீலா மைதானத்தின் பெயரை மாற்றுவது தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என டெல்லி வடக்கு மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS